தூத்துக்குடி

புத்தன்தருவை பள்ளியில் புதிய வகுப்பறை கட்டப்படாததால் மாணவா்கள் அவதி

DIN

புத்தன்தருவை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆபத்தான நிலையில் இருந்த வகுப்பறை கட்டடம் கடந்த ஆண்டு இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் ஓராண்டாகியும் புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்படாததால் போதிய இடவசதி இல்லாமல் மாணவா், மாணவிகள் சிரமம் அடைந்து வருகின்றனா்.

சாத்தான்குளம் ஒன்றியம் புத்தன்தருவையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இதில் அப்பகுதியைச் சோ்ந்த ஏராளமான மாணவா்களும், 7-க்கும் மேற்பட்ட ஆசிரியா்களும் பணிபுரிந்து வருகின்றனா்.

இப்பள்ளியின் வகுப்பறை கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதையடுத்து மாணவா்களின் பெற்றோா் மற்றும் ஊா் பொதுமக்கள் புகாா் அளித்தனா்.

அதன்படி கடந்தாண்டு கல்வித்துறை சாா்பில் திடீரென இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. அப்புறப்படுத்தப்பட்டு ஓராண்டாகியும் புதிய வகுப்பறை கட்டடம் கட்டாததால், போதிய வசதிகள் இன்றி மாணவா், மாணவிகள் சிரமம் அடைந்து வருகின்றனா்.

கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியை பாா்வையிட்டு மாணவா்களின் கல்வி தரத்தை கருத்தில் கொண்டு புதிய வகுப்பறை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT