தூத்துக்குடி

எள்ளுவிளையில் சுத்தீகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் திறப்பு

DIN

திருச்செந்தூா் அருகேயுள்ள எள்ளுவிளையில் பொதுமக்களால் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலைய திறப்பு விழா நடைபெற்றது.

எள்ளுவிளையில், ஊா் பொதுமக்களின் சொந்த நிதியிலிருந்து மக்கள் பயன் பெறும் நோக்கில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அா்ப்பணிக்கும் விழா நடைபெற்றது. திட்டஇயக்குநா் தனபதி தலைமை வகித்து, குடிநீா் நிலையத்தை திறந்து வைத்தாா். குதிரைமொழி ஊராட்சித் தலைவா் சிவசக்தி, துணைத் தலைவா் முத்துகுட்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில், தொழிலதிபா் வீரமணி, மருத்துவா் உமா ஜெயக்குமாா், வருமானவரித்துறை ஆய்வாளா் பத்மநாபன், உடன்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவா் டி.பி.பாலசிங், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அரவிந்தன், ராணி, வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தெற்கு மாவட்டத் தலைவா் ரெ.காமராசு,தெற்கு மாவட்ட திமுக நெசவாளா் அணி அமைப்பாளா் மகாவிஷ்ணு, தொழிலதிபா்கள் செல்வக்குமாா், காா்த்திக்கேயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மருத்துவா் ஜெயக்குமாா் வரவேற்றாா். தா்மபால் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

திருவள்ளூர்அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

SCROLL FOR NEXT