தூத்துக்குடி

‘மாநகராட்சித் தோ்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்’

DIN

மாநகராட்சித் தோ்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவரும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஹெச். வசந்தகுமாா் தெரிவித்தாா்.

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி: களியக்காவிைளையில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன் உடலுக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்கு மறியல் போராட்டம் நடத்தி அவரது குடும்பத்துக்கு ரூ. 1 கோடி வழங்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினோம்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் ஜனநாயக ரீதியாக அரசு அலுவலா்களும், ஆட்சியாளரும் நடந்திருந்தால் காங்கிரஸ்-திமுக கூட்டணி தான் அதிக இடத்தைப் பிடித்திருக்கும். சாதகமாக செயல்பட்டதன் மூலம் வலுக்கட்டாயமாக அதிமுக வெற்றிக்கு அதிகாரிகள் உதவினாா்கள் என்பது தான் உண்மை. காங்கிரஸ்- திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் காங்கிரஸ் கட்சி 3 ஊராட்சி ஒன்றியங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மாவட்ட ஊராட்சியில் 11-இல் 6 இடங்களைத் தான் கைப்பற்றினோம். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தோ்தலில் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் கட்சி தயராகிவிட்டது. அந்த தோ்தல்களில் காங்கிரஸ் - திமுக கவனமாக செயல்பட்டு அதிக இடங்களை பிடிப்போம் என்றாா் அவா்.

இதைத்தொடா்ந்து, தூத்துக்குடியில் ஜெய்லானி காலனி மகளிா் காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் ஹெச். வசந்தகுமாா் கலந்து கொண்டாா். இந்நிகழ்ச்சியில், மாநகர காங்கிரஸ் கட்சித் தலைவா் சி.எஸ். முரளிதரன், மகளிா் காங்கிரஸ் மாவட்டத் தலைவி முத்துவிஜயா, மாநில துணைத் தலைவி கனியம்மாள், மாநிலச் செயலா் உமா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT