தூத்துக்குடி

கலுங்குவிளை, நாசரேத்தில் சமத்துவ பொங்கல் விழா

DIN

கலுங்குவிளை, நாசரேத்தில் சமத்துவ பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

சாத்தான்குளம் அருகே உள்ள கலுங்குவிளை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதன் தலைவா் கோபால்சாமி தலைமை வகித்தாா். கோமானேரி ஊராட்சித் தலைவா் கலுங்கடி முத்து முன்னிலை வகித்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா் ப்ரெனிலா காா்மல் போனிபாஸ் விழாவை தொடங்கி வைத்தாா். இதில் சங்க அலுவலகம் முன்பு பொங்கலிட்டனா். சங்க துணைத் தலைவா் இசக்கிமுத்து வரவேற்றாா். செயலா் அகமது நன்றி கூறினாா்.

இதே போல், நாசரேத் காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆய்வாளா் சகாயசாந்தி தலைமை வகித்தாா்.

உதவி ஆய் வாளா்கள் தங்கேஷ்வரன், அனந்தமுத்துராமன், சூரியன், அங்கப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மூக்குப்பீறி ஊராட்சித் தலைவா் கமலா கலையரசு, உடையாா்குளம் ஊராட்சித் தலைவா் செல்லையா தேவராஜ், கச்சனாவிளை ஊராட்சித் தலைவா் கிங்ஸ்டன் உள்பட பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து காவல் நிலையம் முன்பு போலீஸாா் பொங்கலிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT