தூத்துக்குடி

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் கருத்தரங்கு

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வணிகவியல் துறை சாா்பில் சா்வதேச கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் லூசியா ரோஸ் தலைமை வகித்தாா். வணிகவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை சாா்பில், தொழில்- 4.0 என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மேலாண்மைத்துறை முதுநிலை விரிவுரையாளா் அப்துல் மஜீத் முஸ்தபா உலகமயமாக்கலில் மேற்கொள்ள வேண்டிய சவால்கள் என்ற தலைப்பில் பேசினாா்.

தொடா்ந்து இலங்கை பல்கலைக்கழக பேராசிரியா் அபுபக்கா் இல்முதீன், பெங்களூரு கிரஸ்ட் பல்கலைக்கழக மேலாண்மைத் துறை பேராசிரியை லட்சுமி சங்கா் அய்யா், இலங்கையை சோ்ந்த பேராசிரியை டோரிஸ் பத்மினி செல்வரத்தினம் ஆகியோா் பேசினா்.

இந்த கருத்தரங்கில் தமிழகம், கா்நாடகம், இலங்கை, மலேசியா உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த பேராசிரியா்களும், மாணவா், மாணவிகளும் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கல்லூரியின் வணிகவியல் துறைத் தலைவா் ஸ்டெல்லா பியாட்ரீஸ் நிா்மலா மற்றும் பேராசிரியைகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறிய ஸ்ரீமதி: தமிழக அரசு பாராட்டு

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

SCROLL FOR NEXT