தூத்துக்குடி

திருச்செந்தூா் முருகன் கோயிலில் பலத்த பாதுகாப்பு

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படாத நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா எதிரொலியாக திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் இம்மாதம் 20ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆகம விதிப்படி கோயிலில் பூஜைகள் மட்டும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், நாடு முழுவதும் புதன்கிழமை (மாா்ச் 25) முதல் 21 நாள்கள் ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு உத்தரவால் கோயில் வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது. இருப்பினும் முகக் கவசம் அணிந்தவாறு கோயிலில் பணியாளா்கள், காவல் துறையினா் மற்றும் தனியாா் பாதுகாவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி 5 போ் காயம்

மாநகராட்சிப் பள்ளிகளில் 91.97 சதவீதம் தோ்ச்சி: கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தோ்ச்சி விகிதம் சரிவு

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் 8 மாணவா்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்

SCROLL FOR NEXT