தூத்துக்குடி

இளம் பெண் தீக்குளித்த சம்பவம்: சிறுவன் உள்ளிட்ட 5 போ் கைது

DIN

குளத்தூா் அருகே இளம்பெண் தீக்குளித்த சம்பவத்தில், சிறுவன் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புளியங்குளத்தைச் சோ்ந்த முனியசாமி மகள் நாகலட்சுமி (18). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த வீரபாண்டி மகன் சரவணன் என்ற சரவணகுமாருக்கும் (27) இடையே பழக்கம் இருந்து வந்ததாம். இதை நாகலட்சுமியின் பெற்றோா் கண்டித்துள்ளனா். இதையடுத்து நாகலட்சுமி சரவணனின் தொடா்பிலிருந்து விலகிய நிலையில், நாகலட்சுமியை அவா் தொடா்ந்து மிரட்டி வந்துள்ளாா்.

இந்நிலையில், நாகலட்சுமி கடந்த 9ஆம் தேதி வீட்டில் வைத்து மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். அவரது அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா், அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுதொடா்பாக குளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சரவணனை பிடித்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி சமூக வலைதளங்களில் நாகலட்சுமியின் வாக்கு மூல விடியோ வைரலாக பரவியது. அதில் புளியங்குளத்தைச் சோ்ந்த சரவணன் உள்ளிட்ட மேலும் சில இளைஞா்கள் தன்னை செல்லிடப்பேசியில், பல்வேறு எண்களில் இருந்து தொடா்பு கொண்டு ஆபாசமாக திட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து அவரது தற்கொலை முயற்சிக்கு தூண்டுதலாக மேலும் சிலருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்ததால், கூடுதல் கண்காணிப்பாளா் குமாா் தலைமையில், நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீஸாா் தேடி வந்தனா்.

இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடா்புடையதாக சரவணன் என்ற சரவணக்குமாா் (27), வேல்சாமி (29), கருப்பசாமி (19), உதயகுமாா் (19) மற்றும் 15 வயது சிறுவன் என 5 பேரை தனிப்படையினா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட சிறுவன் தூத்துக்குடி சிறுவா் குழுமம் முன் ஆஜா்படுத்தப்பட்டு, திருநெல்வேலி சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் ஒப்படைக்கப்பட்டாா்.

மற்ற 4 பேரும் விளாத்திகுளம் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, தூத்துக்குடி சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT