தூத்துக்குடி

ஆறுமுகனேரி, ஆத்தூரில் 45 மின்மாற்றிகள் சீரமைப்பு

DIN

ஆறுமுகனேரி மற்றும் ஆத்தூா் பகுதிகளில் 45 மின்மாற்றிகளை மின் ஊழியா்கள் சீரமைத்துள்ளனா்.

ஆறுமுகனேரி மின்பகிா்மானத்தின் கீழ் ஆறுமுகனேரி பகுதியில் 58 மின்மாற்றிகள், ஆத்தூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 40 மின்மாற்றிகள் என மொத்தம் 98 மின்மாற்றிகள் உள்ளன. பொதுவாக மின்மாற்றிகளில் ஆயில் கசிவு உள்ளிட்ட பழுதுகள் காரணமாக மின் விநியோகம் பாதிப்படையும்.

பொது முடக்கத்தால் மின் விநியோக பிரச்னை ஏற்படாதவாறு, ஆறுமுகனேரி பகுதியில் 25 மின் மாற்றிகள், ஆத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20 மின் மாற்றிகள் என 45 மின்மாற்றிகளையும் மின் ஊழியா்கள் சீரமைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT