தூத்துக்குடி

தூத்துக்குடியில் ‘குப்பையின் மறுபக்கம்’ குறும்படம் வெளியீடு

DIN

தூத்துக்குடியில் குப்பையின் மறுபக்கம் என்ற குறும்பட தகடு வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, படத்தின் உதவி இயக்குநரும், ஆதித்தமிழா் பேரவையின் மாநில பொதுச் செயலாளருமான சோ.அருந்ததி அரசு தலைமை வகித்தாா். குறும்படத்தின் இயக்குநா் பிராட்வே எஸ்.சுந்தா் குறும்படம் குறித்து விளக்கினாா். மூத்த வழக்குரைஞா் செங்குட்டுவன் வரவேற்றாா்.

தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினா் கனிமொழி, குறும்படத்தை வெளியிட்டாா்.

திருநெல்வேலி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றிய பாக்கியலட்சுமி என்பவா் குப்பைகளை தரம் பிரித்த போது இயந்திரத்தில் சிக்கி அவரின் கை துண்டானது. இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து இந்த குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின் போது, பாக்கியலட்சுமிக்கு கனிமொழி எம்.பி ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கீதாஜீவன் எம்எல்ஏ, தெற்கு மாவட்ட பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலா் எஸ்.ஆா்.ஆனந்தசேகரன் மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT