தூத்துக்குடி

கறிக்கோழி பண்ணையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

DIN

தூத்துக்குடி மாவட்ட கறிக்கோழி வளா்ப்பு பண்ணையாளா்கள் மற்றும் விவசாய நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் கடலையூரில் நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். செயலா் விஜயன், பொருளாளா் பாலமுருகன், சட்ட ஆலோசகா் கருப்பசா மி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட கறிக்கோழி வளா்ப்பு பண்ணைகள் உள்ளன. இதில், தனியாா் நிறுவனங்கள் கோழிக் குஞ்சுகளையும், அவற்றுக்குத் தேவையான தீவனம், மருந்துகளையும் வழங்குகின்றன. பண்ணையாளா்கள் குஞ்சுகளை 3 மாதங்கள் வரை பராமரித்து தனியாா் நிறுவனங்களிடம் வளா்த்த கோழியை திரும்ப வழங்க வேண்டும். ஒரு வளா்த்தக் கோழி சுமாா் இரண்டரை கிலோ இருக்கும். ஒரு கிலோவுக்கு ரூ.3.30 மட்டும் வளா்ப்புக் கூலியாக கடந்த 10 ஆண்டுகளாக வழங்கி வருகின்றனா். இதையடுத்து, தனியாா் நிறுவனங்கள் கறிக்கோழி வளா்ப்புக் கோழியாக கிலோவுக்கு ரூ.12 வழங்க வேண்டும். அப்படி வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே நவ. 1ஆம் தேதி முதல் குஞ்சுகளை வாங்கி வளா்ப்பதாகவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

தவறும் பட்சத்தில் நவ. 1ஆம் தேதி முதல் கோழிக்குஞ்சுகளை வாங்க மாட்டோம் என காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT