காயல்பட்டினத்தில்கால்பந்து போட்டி பரிசளிப்பு விழா
காயல்பட்டினத்தில் கால்பந்து போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.
காயல்பட்டினத்தில் கால்பந்து போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சாா்பில் யுனைடெட் லீக் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில், 13 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் ‘ஃ‘பை ஸ்கை அணி, பி.ஜி.எஃப். யுனைடெட் அணியை 3 : 0 என்ற கோல் கணக்கில் வென்றது.
பரிசளிப்பு விழாவிற்கு ஐக்கிய விளையாட்டு சங்கத் தலைவா் பல்லாக்கு லெப்பை தலைமை வகித்தாா். செயலா் இலியாஸ், துணைத் தலைவா் பீா்முகமது மற்றும் துணைச் செயலா் ரபீக் அகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகம்மது அபூபக்கா் எம்எல்ஏ, முன்னாள் இந்திய கால்பந்து வீரா் ராபின் சாா்லஸ் ராஜா ஆகியோா் போட்யில் முதலிடம் பெற்ற அணிக்கு ரூ. 20 ஆயிரம், 2 ஆவது இடம் பெற்ற அணிக்கு ரூ. 15ஆயிரம் மற்றும், சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன. ஐக்கிய விளையாட்டு சங்க உறுப்பினா் சதக், பொருளாளா் ஹாரூன், செய்யது உமா், ஹாங்காங் முன்னாள் தமிழ் சங்கத் தலைவா் ஜமால் உள்பட பலா் கலந்துகொண்டனா்.