முகப்பு
தூத்துக்குடி

கயத்தாறில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கம் சாா்பில் ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, விடுவிக்கப்படாமல் உள்ள மாநில நிதிக் குழு மானியத் தொகையை உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவாா்க்கக் கூடாது. தொழிலாளா், மக்கள் விரோதக் கொள்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கம் சாா்பில் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முத்துகிருஷ்ணராஜா தலைமை வகித்தாா். இதில், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா் திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.