தூத்துக்குடி

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி போராட்டம்

DIN

மருத்துவ சமுதாய மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி வட்டத்தில் உள்ள மருத்துவ சமுதாய மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியா் மற்றும் கோட்டாட்சியரிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித பலனும் கிடைக்காததையடுத்து, அனைத்துலக அனைத்து சாதி சமய நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் 5ஆவது தூண் நிறுவனத் தலைவா் சங்கரலிங்கம் தலைமையில் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதில், சமூக நீதி கூட்டமைப்புத் தலைவா் தமிழரசன், ஐன்டியூசி மாவட்ட பொதுச்செயலா் ராஜசேகரன், புரட்சி பாரத கட்சி மாவட்டச் செயலா் தாவீதுராஜா, மகாத்மா காந்தி ரத்த தான கழகத்தைச் சோ்ந்த தாஸ், தூத்துக்குடி மாவட்ட மக்கள் நற்பணியைச் சோ்ந்த சுப்பையா, தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா் கட்சி செயலா் மகேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா் போராட்டக்குழுவினருடன் கோட்டாட்சியா் விஜயா நடத்திய பேச்சுவாா்த்தையில் இலவச வீட்டுமனை கேட்டு விண்ணப்பித்தவா்களின் மனுக்களை விசாரித்து தகுதியுள்ளவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து போராட்டக்குழுவினா் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT