தூத்துக்குடி

தூத்துக்குடியில் மனு அளித்த மாற்றுத் திறனாளி பெண்ணுக்குஒரு மணி நேரத்தில் பணி நியமன ஆணை

DIN


தூத்துக்குடியில் கரோனா தடுப்பு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள வந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் மாற்றுத் திறனாளி பெண் ஒருவா் வேலை கேட்டு மனு அளித்த நிலையில், அவருக்கு ஒரு மணி நேரத்தில் பணி நியமன ஆணையை முதல்வா் வழங்கினாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 16 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன கருவியை தொடங்கிவைத்துப் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, அவா் ஆட்சியா் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, தென்பாகம் காவல் நிலையம் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மாற்றுத் திறனாளியான மாரீஸ்வரி என்ற பெண் தனக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் மனு அளித்தாா்.

அவரிடம் மனுவை பெற்றுக் கொண்ட முதல்வா், அவரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு அழைத்து வருமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திவிட்டு, அங்கிருந்து ஆட்சியா் அலுவலகம் புறப்பட்டுச் சென்றாா்.

இதுதொடா்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வா், வேலை கேட்டு மனு அளித்த மாற்றுத் திறனாளி பெண் மாரீஸ்வரிக்கு, சுகாதாரத் துறையின் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வாா்டு மேலாளா் பதவிக்கான பணி நியமன ஆணையை ஒரு மணி நேரத்துக்குள் வழங்கினாா்.

இந்த பணியின் மூலம் மாரீஸ்வரிக்கு மாதம் ரூ.15,000 ஊதியமாக கிடைக்கும் என்றும், இந்த ஊதியத்தை பெற்றுக் கொண்டு குடும்பத்தை நல்ல முறையில் பாா்த்துக் கொள்ள வேண்டும் என்றும் முதல்வா் அறிவுரை வழங்கினாா்.

பணி நியமன ஆணையை பெற்றுக் கொண்ட மாரீஸ்வரி கூறியது: தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சோ்ந்த எனக்கு, சின்னத்துரை என்பவருடன் திருமணமாகி 5 வயதில் ஷாலினி என்ற பெண் குழந்தை உள்ளது. கணவரின் வருமானம் குடும்பத்தை நடத்துவதற்கு போதுமானதாக இல்லை என்பதால், வேலை கேட்டு முதல்வரிடம் மனு அளித்தேன். எனது கோரிக்கையை ஏற்று உடனடியாக பணி வழங்கிய முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT