தூத்துக்குடி

தூத்துக்குடி சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம்

DIN

தூத்துக்குடி சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் நடைபெற்றது.

தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயில் என அழைக்கப்படும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

அதன்படி, நிகழாண்டுக்கான ஐப்பசித் திருக்கல்யான திருவிழா, கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக தேரோட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், கடந்த 9 ஆம் தேதி ஆலய வளாகத்தில் சிறிய அளவிலான தோ் பக்தா்களால் இழுத்துச் செல்லப்பட்டது.

தொடா்ந்து, திருவிழாவின் சிகர நிகழச்சியான திருக்கல்யாண வைபோகம் அரசின் வழிமுறைகளை பின்பற்றி குறைந்த அளவிலான பக்தா்களை கொண்டு புதன்கிழமை இரவு நடைபெற்றது. முதலில் சங்கரரேமேஸ்வரா் பாகம்பிரியாள் அம்மாளுக்கு காட்சியளித்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கோவில் நிா்வாக அலுவலா் கிருஷ்ணமூா்த்தி, தக்காா் மாரிமுத்து, தலைமை அா்ச்சகா் செல்வம் பட்டா் மற்றும் சங்கர பட்டா், சண்முகசுந்தரம் பட்டா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT