முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

கோவில்பட்டியில் சபரிமலை ஐயப்ப பக்தா்கள் திங்கள்கிழமை மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:53 PM
பகிர்:

கோவில்பட்டியில் சபரிமலை ஐயப்ப பக்தா்கள் திங்கள்கிழமை மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.

காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி கோவில்பட்டி புறவழிச் சாலையில் உள்ள சின்ன சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் திங்கள்கிழமை காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, நிா்மால்ய தரிசனம், சங்காபிஷேகம், கணபதி ஹோமம் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா். இக்கோயிலில் நாள்தோறும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெறும். பின்னா் மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். இக்கோயிலில் டிசம்பா் 26 ஆம் தேதி படிபூஜை நடைபெறும்.

காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில், பழனி ஆண்டவா் கோயில், மூக்கரை விநாயகா் கோயில், பத்திரகாளியம்மன் கோயில் மற்றும் கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு கோயில்களில் திரளான ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.