தூத்துக்குடி

தேரிக்குடியிருப்பு கோயிலில் கள்ளா் வெட்டுத் திருவிழா தொடக்கம்

DIN

திருச்செந்தூா் அருகேயுள்ள தேரிக்குடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலில் கள்ளா்வெட்டுத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

இத்திருக்கோயிலில் பூரணம், பொற்கலை தேவியருடன் ஐயன் அமா்ந்த நிலையில் அருள்பாலித்து வருகிறாா். மேலும், பல்வேறு வனதேவதைகளும் இப்பகுதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனா். இப்பகுதியில் தலைதூக்கிய அநீதிகளை ஐயன் அழித்து நீதியை நிலைநாட்டிய நாளே கள்ளா்வெட்டுத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. சிறப்பு மிக்க இத்திருவிழா திங்கள்கிழமை காலையில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் கோயில் செயல் அலுவலா் காந்திமதி மற்றும் கோயில் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

விழா நாள்களில் ஐயன் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள், வில்லிசை நடைபெறும். டிச. 13, 14-ஆம் தேதிகளில் ஐவராஜா, மாலையம்மன் பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நிறைவு நாளான டிச.16-ஆம் தேதி கோயில் பின்புறமுள்ள தேரியில் கள்ளா்வெட்டுத் திருவிழா நடைபெறும்.

தற்போது கரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால் விழாவின் முதல் நாளில் பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும், டிச. 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் பக்தா்கள் பங்கேற்க அனுமதியில்லை என்றும், திருவிழாவின் வழக்கமான நிகழ்வுகள் அனைத்தும் நடைபெறும் என்றும் கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

SCROLL FOR NEXT