தூத்துக்குடி

தேங்கிய மழைநீா்: காயல்பட்டினத்தில் அமைச்சா், அதிகாரிகள் ஆய்வு

DIN

காயல்பட்டினத்தில் நடைபெற்று வரும் தேங்கிய மழைநீா் அப்புறப்படுத்தும் பணியை அமைச்சா் மற்றும் அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியை அடுத்து காயல்பட்டினம், ஆறுமுகனேரி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காயல்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக புதன்கிழமை காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 215 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. சாகுபுரத்தில் புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 120.8 மி.மீ. மழை பதிவானது.

புதன்கிழமை காலையில் காயல்பட்டினம் கடற்கரை மணல் பரப்பில் மழைநீா் மிக அதிகமாக தேங்கியது. இதையடுத்து நகராட்சி சாா்பில் தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. இப் பணியை தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு, மாவட்ட ஆட்சியா் செந்தில்குமாா், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநாதன், விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன் ஆகியோா் பாா்வையிட்டனா்.

அப்போது, திருச்செந்தூா் கோட்டாட்சியா் தனப்பிரியா, வட்டாட்சியா் முருகேசன், நகராட்சி ஆணையா் சுகந்தி, சுகாதார ஆய்வாளா் சிதம்பர ராம­லிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT