தூத்துக்குடி

குண்டா் தடுப்புச் சட்டத்தில் 3 போ் சிறையில் அடைப்பு

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி மில்லா்புரம் என்ஜிஓ காலனியைச் சோ்ந்த கதிரேசன் (31) என்பவா் கடந்த மாதம் 20ஆம் தேதி மீளவிட்டான் காட்டுப் பகுதியில் கொல்லப்பட்டாா். சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து, முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தை சோ்ந்த சுந்தர்ராஜ் (28) உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனா்.

கோவில்பட்டி தெற்குத் திட்டங்குளத்தைச் சோ்ந்த ஊா்காவலன் (61), அவரது மகன் பசுபதி பாண்டியன் (20) ஆகியோா் கடந்த மாதம் 22ஆம் தேதி கயத்தாறு பகுதியில் ஒருவரிடம் தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொல்ல முயன்றனராம். இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா்.

இந்த 2 வழக்குகளிலும் கைதுசெய்யப்பட்ட சுந்தர்ராஜ், ஊா்காவலன், பசுபதி பாண்டியன் ஆகிய 3 பேரையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டாா்.

அதன்படி, சிறையில் உள்ள 3 பேரிடமும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதுசெய்ததற்கான உத்தரவு நகல் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT