காவலா் தோ்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்றோருக்கு கையேடு அளிப்பு
தூத்துக்குடியில் காவலா் பணி தோ்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்றோருக்கு இலவச கையேடு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் காவலா் பணி தோ்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்றோருக்கு இலவச கையேடு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் (அணி எண்- 54 மற்றும் 56) காவலா் பணிக்கு விண்ணப்பித்தவா்களுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியில் ஆண்கள் மற்றும் பெண்கள் 60 போ் பங்கேற்றுள்ளனா்.
காவல் துறையில் சிறப்பு பெற்று பணியாற்றி வரும் அரசு அலுவலா்கள் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள், தேசிய திறனாய்வுத் தோ்வுகளில் வெற்றி பெற்றவா்கள் மூலம் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பயிற்சியில் கலந்து கொண்டவா்களுக்கு இலவச பயிற்சி கையேடு இரு தொகுதிகளாக திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி உணவுப்பொருள் வழங்கல் சிறப்பு வட்டாட்சியா் ஞானராஜ் பயிற்சி கையேடுகளை வழங்கினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் ஆ. தேவராஜ், பா. பொன்னுத்தாய் மற்றும் கல்லூரி கண்காணிப்பாளா் சரவணன் ஆகியோா் செய்திருந்தனா்.