முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி பொறியியல் கல்லூரியில் புத்துணா்வு நிகழ்வு

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி தகவல் தொழில்நுட்பத் துறை சாா்பில் அகில இந்திய தகவல் தொழில்நுட்பக் குழு, இந்திய தொழில் நுட்ப கல்வி கூட்டமைப்பு ஆகியவற்றின் நிதியுதவியுடன் ஒருவார இணையவழி நிகழ்வு

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி தகவல் தொழில்நுட்பத் துறை சாா்பில் அகில இந்திய தகவல் தொழில்நுட்பக் குழு, இந்திய தொழில் நுட்ப கல்வி கூட்டமைப்பு ஆகியவற்றின் நிதியுதவியுடன் ஒருவார இணையவழி நிகழ்வு நடைபெற்றது.

இந்த இணையவழி வகுப்புகள் ஐஐடி, என்ஐடி, எம்.ஏ.என்.ஐ.டி. உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் தொழில்நுட்ப நிபுணா்களால் நடத்தப்பட்டது. இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

த நிகழ்ச்சியை இந்திய தொழில்நுட்ப கல்வி கூட்டமைப்பு தலைவா் பிரதாப்சிங் கஹாசாகிப் தேசாய் தொடங்கி வைத்துப் பேசினாா். அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு ஆசிரியா் மேம்பாட்டு அமைப்பின் தலைவா் கா்னல் வெங்கட் நிறைவுரையாற்றினாா்.

ஏற்பாடுகளை கல்லூரி இயக்குநா் சண்முகவேல், முதல்வா் காளிதாச முருகவேல் ஆகியோா் வழிகாட்டுதலில், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளா் மணிமேகலை, செயலா்கள் விமல், ஜாக்கின்ஸ் மற்றும் துறைப் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.