ஆதரவற்றோருக்கு மதிய உணவு
தி.மு.க. இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்செந்தூா் அருகே அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலைய ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
தி.மு.க. இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்செந்தூா் அருகே அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலைய ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
காயல்பட்டினம் நகர இளைஞரணி சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, நகர இளைஞரணிச் செயலா் கலீல் ரகுமான் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முதியோா் மற்றும் மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கினாா்.
நிகழ்ச்சியில், புனித சூசை அறநிலைய இயக்குநா் இசிதோா், துணை இயக்குநா் சேவியா், மாவட்ட அவைத்தலைவா் அருணாசலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், காயல்பட்டினம் நகரச் செயலா் முத்து முகம்மது உள்பட பலா் கலந்து கொண்டனா்.