முகப்பு
தூத்துக்குடி

லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் முற்றுகை

வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்ற போக்குவரத்து ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துதல், ஒளிரும் பட்டை ஒட்டுவதற்கு உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும்,

வாகனங்களின் இருப்பிடம் கண்டறிவதற்காக குறிப்பிட்ட நிறுவனங்களில் இருந்து வாங்கப்பட்ட கருவிகளை மட்டும் பொருத்த வேண்டும் என்ற போக்குவரத்து ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டி லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன் திங்கள்கிழமை திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு நல்லதம்பி தலைமை வகித்தாா். கண்ணன், கிருஷ்ணசாமி, நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், லாரி உரிமையாளா்கள் சங்க உறுப்பினா்கள் திரளானோா் கலந்து கொண்டனா். பின்னா் போராட்டக் குழுவினா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழியன் பாண்டியனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.