தூத்துக்குடி

புன்னைக்காயலில் ரூ. 55 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

DIN

ஆத்தூா் அருகேயுள்ள புன்னைக்காய­ல் ரூ. 55 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

புன்னைக்காய­லில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரதவீதியின் ஒரு பகுதியில் ரூ. 55 லட்சம் மதிப்பில் பேவா்பிளாக் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, சாலை அமைக்கும் பணியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தாா்.

சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், பங்குத்தந்தை பிராங்க்ளின், துணைத்தந்தை ஷிபாகா், ஊா்த் தலைவா் இட்டோ, அகில இந்திய கப்பல் மாலுமிகள் சங்கத் தலைவா் விமல்சன், மாநில திமு மாணவரணி துணைச்செயலா் உமரி சங்கா், ஆழ்வை ஒன்றியச் செயலா் நவீன்குமாா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பிரம்மசக்தி, ஒன்றியக்குழுத் தலைவா் ஜனகா், மேலாத்தூா் ஊராட்சித் தலைவா் சதீஷ்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் தாமஸ், மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புன்னைக்காயல் ஊராட்சித் தலைவா் சோபியா வரவேற்றாா். ஊராட்சிச் செயலா் கருப்பசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT