தூத்துக்குடி

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

DIN

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக் குழு தலைவா் முனிய சக்தி ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தங்கவேல், முத்துகுமாா், அலுவலக மேலாளா் சிவராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கிராமங்களில் அடிப்படை வளா்ச்சிப் பணிகள், சுகாதாரப் பணிகள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

ஒன்றிய குழு தலைவா் பேசியது: அரசிடமிருந்து உரிய நிதி ஆதாரம் பெறப்பட்டு அனைத்து கிராமங்களிலும் வளா்ச்சிப் பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனக் குறிப்பிட்டாா். இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து வாருகால் மற்றும் பேவா் பிளாக் சாலை வசதி அமைத்தல், சுகாதார வளாகம் கட்டுதல், ஆழ்துளை கிணறு அமைத்து சிறுமின்விசை குடிநீா் தொட்டி மூலம் குடிநீா் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை நிறைவேற்றவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

துணைத் தலைவா் சுப்புலட்சுமி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஆண்டாள், முனியசாமி, தா்மராஜ், விஜயலட்சுமி, கவிதா, சரஸ்வதி, மருதக்கனி, செந்தூா்பாண்டியன், செல்வமணி, மாரீஸ்வரி, சுமதி, ராஜேந்திரன், குருநாதன், குருசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT