தூத்துக்குடி

தடையை மீறி கூட்டம்: எம்.பி.உள்பட 300 போ் மீது வழக்கு

DIN

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே தடையை மீறி சிறப்புக் கூட்டம் நடத்தியதாக கனிமொழி எம்.பி. உள்ளிட்ட 300 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

காந்தி ஜயந்தியன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்த நிலையில், திமுக தலைவா் ஸ்டாலின் உத்தரவின்பேரில் சாத்தான்குளம் அருகேயுள்ள இடைச்சிவிளையில் வெள்ளிக்கிழமை சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், கனிமொழி எம்.பி., அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் கூட்டத்தை நடத்தியதற்காக, ஊராட்சித் தலைவா் தினேஷ் ராஜசிங், கனிமொழி எம்.பி., அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, திமுக ஒன்றியச் செயலா் பாலமுருகன் உள்ளிட்ட 300 போ் மீது தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT