ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் கருடசேவை
தச்சமொழி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஸ்ரீபெருமாள் சுவாமிக்கு புரட்டாசி 4 ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு கருடசேவை நடைபெற்றது.
தச்சமொழி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஸ்ரீபெருமாள் சுவாமிக்கு புரட்டாசி 4 ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு கருடசேவை நடைபெற்றது.
இதையொட்டி ஸ்ரீமுத்து மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள்,
தொடா்ந்து ஸ்ரீபெருமாளுக்கு 108 வகையான சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம், சிறப்பு அலங்கார தீபாராதனை, பூஜை ஆகியவை நடைபெற்றது. இதையடுத்து ஸ்ரீபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருடசேவையுடன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.