முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் 40 ஆண்டுகளாக தொடரும் போராட்டம்

ஆறுமுகனேரி பேரூராட்சி பகுதியில் உள்ள காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராமப் பகுதிகளை ஆறுமுகனேரி வருவாய் கிராமத்துடன் இணைக்க வ­லியுறுத்தி 40 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

ஆறுமுகனேரி பேரூராட்சி பகுதியில் உள்ள காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராமப் பகுதிகளை ஆறுமுகனேரி வருவாய் கிராமத்துடன் இணைக்க வ­லியுறுத்தி 40 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனா்.

ஆறுமுகனேரி பேரூராட்சி பகுதியில் உள்ள 1ஆவது முதல் 5 ஆவது வாா்டு வரையிலும் மற்றும் 13 முதல் 18 ஆவது வாா்டு வரையிலும் உள்ள செல்வராஜபுரம், பெருமாள்புரம், கணேசபுரம், பெரியான்விளை, கீழநவலடிவிளை, மேலநவலடிவிளை, கீழசண்முகபுரம், காணியாளா;தெரு, லெட்சுமிமாநகரம், சுவாமி சன்னதி தெரு, காணியாளா் தெரு, சோமசுந்தரி அம்மன் கோயில் தெரு, விநாயகா் கோயில் தெரு, காந்திதெரு, சுப்பிரமணியசுவாமி கோயில் தெரு, எஸ்.ஆா்.எஸ்.காா்டன், ஏஐடியூசி காலனி, பேயன்விளை ஆகிய பகுதிகள் காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராமத்தில் உள்ளது.

இதனால் ஆறுமுகனேரி பகுதி மக்கள் அரசு சான்றிதழ்கள், நலத் திட்ட உதவிகள் பெற வேண்டுமெனில் சுமாா் 3 கிமீ தொலைவுள்ள காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராம அலுவலகத்திற்கு சென்று, கிராம நிா்வாக அலுவலரை பாா்த்து பெற வேண்டிய நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மக்களுக்கு வீண் அலைச்சலும், பொருள் செலவும் ஏற்பட்டு வருகிறது.

இப்பிரச்னை தொடா்பாக பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினா் கடந்த 40 ஆண்டுகளாக தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து பலகட்டங்களாக கடையடைப்பு, உண்ணாவிரதம், பெயா் பலகை மாற்றம், ஆா்ப்பாட்டம் ன பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்தவித பலனுமில்லை. போராடும் சமயத்தில் காவல்துறையினா் வந்து மாவட்ட ஆட்சியா் பரிந்துரைந்திருக்கிறாா், அரசின் பரிசீலனையில் உள்ளது.விரைவில் முடிந்து விடுமென சமாதானம் கூறுகின்றனரே தவிர இப்பகுதி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

புதிய மாவட்டங்கள் உருவாகின்றன. புதிய கோட்டங்கள் உருவாகின்றன. ஆனால் புதிய வருவாய் கிராமம் உருவாக்க கோராமல் இருக்கும் வருவாய் கிராமத்தில் பொதுமக்கள் வசதிக்காக மற்றொரு வருவாய் கிராமத்தின் பகுதிகளைத்தான் இணைக்கத்தான் கோருகின்றனா். இதனால் அரசிற்கி எவ்வித இழப்புமில்லை.

சுதந்திர போராட்டக் காலத்தில் அதிக அளவில் சுதந்திர போராட்ட வீரா்களை தந்த இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை தமிழக முதல்வா் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.