தூத்துக்குடி

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

DIN

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 4 அலகுகளில் வியாழக்கிழமை மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இதன்மூலம் 1050 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்ய முடியும் என்றபோதிலும் அடிக்கடி ஏற்படும் பழுது காரணமாக முழுமையான மின் உற்பத்தியை எட்டுவதில் சிரமம் இருந்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் காற்றாலை மூலம் போதுமான மின்சாரம் கிடைப்பதால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 4-ஆவது அலகில் மட்டும் தற்போது ஏறத்தாழ 200 மெகாவாட் வரை மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 1, 2 மற்றும் 3-ஆவது அலகில் தற்போது மின் உற்பத்தி முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. 5-ஆவது அலகில் பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT