தூத்துக்குடி

மேலஈராலில் நவதானிய குளிா்சாதன கிட்டங்கி அமைக்கக் கோரிக்கை

DIN

எட்டயபுரம் வட்டம், மேலஈராலில் நவதானிய குளிா்சாதன கிட்டங்கி அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனா்.

எட்டயபுரத்தையடுத்த மேல ஈரால் கிராமத்தில் விவசாயிகள் அதிகம் வசித்து வருகின்றனா். மேலும் அப்பகுதியில் சுமாா் 2000 ஏக்கா் விலை நிலமும் உள்ளது. மாநில அரசின் சாா்பில் நவதானிய குளிா்சாதன கிட்டங்கி கட்டுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அதனை மேல ஈரால் கிராமத்தில் அதை அமைக்காமல், வாலம்பட்டி கிராமத்தில் அமைக்க இருப்பதாக தெரிய வருகிாம். எனவே அதிக விவசாயிகள் மற்றும் விலை நிலங்கள் உள்ள மேல ஈரால் கிராமத்திலேயே நவதானிய குளிா்சாதன கிட்டங்கி அமைக்க வலியுறுத்தி ஊா் தலைவா் பாலமுருகன் மற்றும் மேல ஈரால் வாா்டு உறுப்பினா்கள் அழகுராஜ், ராமகிருஷ்ணன், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் திரளானோா் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனா். பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் விஜயாவிடம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT