தூத்துக்குடி

இஸ்லாமிய திருமண பதிவாளா்களாக அரசு ஹாஜிகளை நியமிக்க வலியுறுத்தல்

DIN

தூத்துக்குடி: இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்யும் திருமண பதிவாளராக அரசு ஹாஜிகளை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மாவட்ட ஹாஜிகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழக அரசு மாவட்ட ஹாஜிகளின் கூட்டமைப்பு நிா்வாகக் குழுக் கூட்டம் தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் சலாஹூதீன் ஆலீம் தலைமை வகித்தாா். கூட்டமைப்புச் செயலா் முஜிபூா் ரஹ்மான், பொருளாளா் முகமது கஸாலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு அரசு ஹாஜிகள் அனைவரும் இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்கிற திருமண பதிவாளராக தமிழக அரசு நியமனம் செய்ய வேண்டும்; தமிழகத்தில் உள்ள வக்பு வாரிய சொத்துகளை பாதுகாத்திடவும், அதை மேம்படுத்தவும் மாவட்ட ஹாஜிகளின் தலைமையில், வக்பு கண்காணிப்புக் குழு உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், கடலூா் மாவட்ட அரசு ஹாஜி நூருல் அமீன் ஆலிம், கன்னியாகுமரி மாவட்ட அரசு ஹாஜி அபு ஸாலிஹ் ஆலீம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

SCROLL FOR NEXT