தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் தொடர் உண்ணாவிரதம் இருக்க முயன்றவர் கைது

DIN

சாத்தான்குளத்தில் காவல்துறையைக் கண்டித்து தொடர் உண்ணாவிரதம் இருக்க முயன்ற விஸ்வகர்மா பொது தொழிலாளர் சங்க செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் நகை தொழிலாளர் மூக்காண்டி. இவருக்கும் வேறு ஒரு நபருக்கும் சொத்துப் பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்து வந்தது. இந்நிலையில் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக குறிப்பிட்ட அந்த நிலத்தில் உள்ள உடை மரங்களை எதிர்தரப்பினர் வெட்டியுள்ளார். 

இது குறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என காவல்துறையை கண்டித்தும் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் அந்த இடத்திற்கு தீர்வு ரசீது வழங்கிய ஊராட்சி்மன்றத்தை கண்டித்தும் மின்சாரம் வழங்கிய மின்வாரியதுறையைக் கண்டித்தும் தொடர்ந்து 7 நாட்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஒரு வாரத்திற்கு முன்பாக அறிவிப்பு கொடுத்திருந்தார். 

அதன்படி இன்று காலை சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு தனது குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்தவரை சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பெர்னாட் சேவியர் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம்

கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வனத்துறையைக் கண்டித்து நடைப்பயணம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டத்தில் முடிவு

கெங்கவல்லி ஒன்றியத்தில் படிக்காதவா்கள் கணக்கெடுப்பு

திருச்செங்கோடு வைகாசி விசாக தோ்த் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT