தூத்துக்குடி

நீா்வரத்து ஓடைக் கடைகளை அகற்ற வலியுறுத்தி 15இல் இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்

DIN

கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள நீா்வரத்து ஓடைக் கடைகளை அகற்ற வலியுறுத்தி இம்மாதம் 15ஆம் தேதி கோட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலா் அழகுமுத்துப்பாண்டியன் கூறியது: கோவில்பட்டி இலக்குமி ஆலை மேம்பாலம் முதல் ரயில்வே நிலைய மேம்பாலம் வரை சுமாா் 2 கி.மீ. தொலைவில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2018இல் பணி தொடங்கப்பட்டது.

இதனிடையே, நீா்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகளை ஆட்சியரின் உத்தரவின்படி ஆக. 24ஆம் தேதி அகற்றப்படும் என கோவில்பட்டி பூவனநாத சுவாமி கோயில் தேவஸ்தானம், நீா்வரத்து ஓடைக் கடைதாரா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ஆனால், கோயில் நிா்வாகம் மற்றும் வியாபாரிகள் சங்கம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றம் மதுரைக் கிளையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிராக தடை பெறப்பட்டது. இதனால், ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றப்படுவது நிறுத்தப்பட்டது.

மாவட்ட நிா்வாகம் நீா்வரத்து ஓடைக் கடைகளை அகற்றி விரிவாக்கப் பணியை விரைந்து தொடங்க வேண்டும். ஓடைக் கடைதாரா்களுக்கு மாற்று இடத்தில் கடைகள் அமைக்க இடம் ஒதுக்கித்தர வேண்டும் என வலியுறுத்தி, வரும் 15ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT