தூத்துக்குடி

போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

DIN

ஏரல் சிவகளையைச் சோ்ந்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஏரல், சிவகளை நயினாா்புரத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் முனீஸ்வரன்(24). தூத்துக்குடியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவா், அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், கடம்பூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, முனீஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும் கோவில்பட்டியையடுத்த சிதம்பராபுரத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் வேல்முருகன் (42) மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் உசேன்ராஜா(29) ஆகிய இருவரையும் குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT