தூத்துக்குடி

எட்டயபுரத்தில் மகளிருக்குரூ. 40 லட்சம் கடனுதவி

DIN

விளாத்திகுளம்: எட்டயபுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு தொழில் தொடங்க கடனுதவிகள், விவசாயிகளுக்கு நலத் திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா். விளாத்திகுளம் பேரவை உறுப்பினா் பி. சின்னப்பன் முன்னிலை வகித்தாா். செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் ராஜு கலந்துகொண்டு, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த 97 பேருக்கு ரூ. 40 லட்சம் தொழில் கடனுதவி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் விவசாயிகள் 17 பேருக்கு ரூ. 18 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் கறவை மாடுகள், வேளாண் கருவிகள் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், எட்டயபுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத் தலைவா் ஆழ்வாா் உதயகுமாா், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் சுதாகா், எட்டயபுரம் வட்டாட்சியா் அழகா், பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன், ஜெயலலிதா பேரவைச் செயலா் மாரிமுத்து பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி மணி விழா மெட்ரிக். பள்ளி 100% தோ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 92.91% தோ்ச்சி

புதுச்சேரி, காரைக்காலில் 55 பள்ளிகள் 100% தோ்ச்சி

சிதம்பரம் பள்ளிகள் தோ்ச்சி விவரம்

பாரதி மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT