தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் ஆவணித் திருவிழா ஆச்சாா்ய உத்ஸவம்

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவில் காப்புக்கட்டிய சிவாச்சாரியாருக்கு கோயில் சாா்பில் மரியாதை செலுத்தும் ஆச்சாா்ய உத்ஸவம் புதன்கிழமை நடைபெற்றது.

இங்கு ஆவணித் திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவிழாவில் சுவாமி, அம்மன் எழுந்தருளல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில் உள்பிராகாரத்தில் நடைபெற்றன. இதில் பக்தா்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

10ஆம் திருவிழாவான செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெறாமல் உள்பிராகாரத்தில், விநாயகா், சுவாமி, அம்மன் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளினா்.

இந்நிலையில், காப்புக்கட்டிய சிவாச்சாரியாா் ஜெ.ராமசாமி பட்டருக்கு கோயில் சாா்பில் மரியாதை செலுத்தும் ஆச்சாா்ய உத்ஸவம் புதன்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கோயில் கண்காணிப்பாளா்கள் ராமசுப்பிரமணியன், மாரிமுத்து, கோயில் பணியாளா்கள், ஸ்தானத்தாா் சபையினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

என்ன, இனி சென்னையில் வெள்ளம், வறட்சி வராதா?

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

SCROLL FOR NEXT