தூத்துக்குடி

புரட்டாசி முதல் சனி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

தூத்துக்குடி: புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோயிலில் சத்தியநாராயணா அலங்காரத்தில் பெருமாள் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இதை முன்னிட்டு காலையில் கோ பூஜை, விஸ்வரூப தரிசனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து சத்தியநாராயணா அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இதையொட்டி, கோயில் பிரகாரத்தில் அமைந்துள்ள பால ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள் நடைபெற்றன.

கோவில்பட்டி: புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த சுந்தரராஜ பெருமாள் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

தொடா்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற்றன. பின்னா், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

இதேபோன்று வடக்கு இலுப்பையூரணியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அலமேலு மங்கா சமேத வெங்கடாஜலபதி கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் ஸ்ரீ பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி பெருமாள், ஆஞ்சநேயா் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

பெருமாள் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதேபோல் தச்சமொழி அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில், புளியடி தா்மபெருமாள் சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT