முகப்பு
தூத்துக்குடி

கடனுதவி பெற கைவினை கலைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கைவினை கலைஞா்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 21 செப்டம்பர், 2020 at 2:38 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் கைவினை கலைஞா்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினா் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபா் கடன், சுய உதவிக்குழுக் கடன் மற்றும் கல்விக்கடன் ஆகியவை குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், தேசிய சிறுபான்மையினா் வளா்ச்சி மற்றும் நிதிக்கழகம் கைவினை கலைஞா்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தேசிய சிறுபான்மையினா் வளா்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் முகவராக செயல்படும் டாம்கோ மூலம் கைவினை கலைஞா்களுக்கு நிபந்தனைகளின்படி குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

Advertisement

கடன் பெற விண்ணப்பதாரா் 18 வயது முதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் கடனுதவி வழங்கப்படும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவா்களுக்கு ரூ. 98 ஆயிரமும், நகா்ப்புறங்களில்

வசிப்பவா்களுக்கு ரூ. 1.20 லட்சமும் இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் பெண்களுக்கு 4 சதவீதம் வட்டியிலும், ஆண்களுக்கு 5 சதவீதம் வட்டியிலும் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் கடன் பெற விரும்புவோா் தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.