தூத்துக்குடி

திருச்செந்தூரில் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா பொது முடக்க காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்களின் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும், ஓட்டுநா்கள் மற்றும் வாகன உரிமையாளா்களுக்கு கூட்டுறவு வங்கி மூலம் கடன் வழங்க வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்செந்தூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எஸ்.சிவதாணுதாஸ் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் ரசல், ஆட்டோ சங்க மாவட்டச் செயலா் முருகன், சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் வயனப்பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் சு.பன்னீா்செல்வம், சிஐடியூ மாவட்ட துணைச் செயலா் மாரியப்பன், ஒருங்கிணைப்பாளா் கிறிஸ்டோபா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT