முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் நேதாஜி சிலை அமைக்கக் கோரிக்கை

கோவில்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு சிலை அமைக்க வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

கோவில்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு சிலை அமைக்க வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவில்பட்டியில் தேசியத் தலைவா் சுபாஷ் சந்திரபோஸ்க்கு சிலை அமைக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவா், பிரதமா், தமிழக ஆளுநா், முதல்வா் மற்றும் அமைச்சா்களுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டும் தற்போதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, இவ்வமைப்பைச் சோ்ந்த பாலமுருகன் தலைமையில், சமக முன்னாள் நகரச் செயலா் முத்துகணேஷ் உள்பட திரளானோா் கண்களில் கருப்புத்துணி கட்டிவாறு கோட்டாட்சியா் அலுவலகத்தில் திரண்டனா். பின்னா், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு சிலை அமைக்க வேண்டும், கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நேதாஜி பெயா் சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →