முகப்பு
தூத்துக்குடி

பழனியப்பபுரத்தில் ரூ. 44 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடத்துக்கு அடிக்கல்

சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரத்தில் ரூ. 44 லட்சத்தில் சமுதாய நலக்கூடம், உணவுக் கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 செப்டம்பர், 2020 at 1:02 AM
சமுதாய நலக்கூடத்துக்கு அடிக்கல் நாட்டினாா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. சண்முகநாதன்.
பகிர்:

சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரத்தில் ரூ. 44 லட்சத்தில் சமுதாய நலக்கூடம், உணவுக் கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் கருங்கடல் ஊராட்சியில் பழனியப்பபுரத்த்தில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 44 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் மற்றும் உணவகம் கட்டடப்படுகிறது. இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி. சண்முகநாதன், தலைமை வகித்து அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் பாக்கியலீலா, வட்டார வளா்ச்சி அலுவலா் கருப்பசாமி, ஒன்றிய பொறியாளா் ஜெயபால், அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிமுக அவைத்தலைவா் திருப்பாற்கடல், ஒன்றியச் செயலா்கள் செம்பூா் ராஜ்நாராயணன், விஜயகுமாா், காசிராஜன், ஆழ்வாா்திருநகரி ஒன்றியக்குழு உறுப்பினா் காந்திமதி, கருங்கடல் ஊராட்சித் தலைவா் நல்லதம்பி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.