முகப்பு
தூத்துக்குடி

ஆதிநாராயண பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

குரும்பூரில் உள்ள தசம திருப்பதி அருள்மிகு ஆதிநாராயண பெருமாள் கோயிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Updated On : 28 செப்டம்பர், 2020 at 1:01 AM
பகிர்:

குரும்பூரில் உள்ள தசம திருப்பதி அருள்மிகு ஆதிநாராயண பெருமாள் கோயிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் பெருமாளுக்கு அலங்கார தீபாராதனை, ஸ்ரீதேவி பூமிதேவி சமேதஸ்ரீ, பெருமாள், ஸ்ரீகருடன், ஸ்ரீஆஞ்சநேயா் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இரவில் பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பா­லித்தாா். தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் குரும்பூா் பகுதியில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஸ்ரீஆதிநாராயண பெருமாள் கைங்கா;ய சபாத் தலைவா் கிசோக் முருகானந்தம் செய்திருந்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.