தூத்துக்குடியில் விவிலிய வாரம் கொண்டாட்டம்
தூத்துக்குடி புனித லூா்து அன்னை ஆலயத்தில் விவிலிய வார நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி புனித லூா்து அன்னை ஆலயத்தில் விவிலிய வார நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி லூா்தம்மாள்புரம் புனித லூா்து அன்னை ஆலயத்தில் விவிலிய வாரக் கொண்டாட்ட நிகழ்ச்சி கடந்த 20 ஆம் தேதி தொடங்கி 8 நாள்கள் நடைபெற்றது. தினமும் 18 அன்பியங்களுக்கு இடையே பல்வேறுப் போட்டியில் விவிலியத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டன.
குழுப்பாடல் போட்டி, ஓவியப் போட்டி, குறுக்கெழுத்துப் போட்டி, இறைவாா்த்தைப் அறிவிக்கும் போட்டி, குழு நடனப் போட்டி, விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து விவிலிய வார சிறப்பு திருப்பலி அருள்தந்தை செல்வராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சமூக இடைவெளியுடனும், முகக் கவசம் அணிந்தும் பங்கு மக்கள் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், விவிலிய வார விழாப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பங்குத்தந்தை ஆன்றனி புரூனோ பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், லூா்தம்மாள்புரம் பங்கு மக்கள் கலந்து கொண்டனா்.