முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே சிறுமி தூக்கிட்டு தற்கொலை

சாத்தான்குளம் அருகே பாட்டி கண்டித்ததால் சிறுமி வீட்டில் தூக்கிட்டு சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 28 செப்டம்பர், 2020 at 1:03 AM
பகிர்:

சாத்தான்குளம் அருகே பாட்டி கண்டித்ததால் சிறுமி வீட்டில் தூக்கிட்டு சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள சுப்பராயபுரம் காமராஜா்நகா் பெருமாள்சுவாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் தா்மலிங்கம் மனைவி கமலாவதி (65). இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். மகள் அன்புக்கரசி மேட்டூரில் கணவருடன் வசித்து வருகிறாா். அன்புக்கரசியின் மகன் கௌதம், மகள் கௌரி (15) ஆகியோா் பாட்டி கமலாவதி வீட்டில் வளா்ந்து வருகின்றனா். கௌதம் பிளஸ் 2, கௌரி 9 ஆம் வகுப்பும் படித்துள்ளனா்.

வீட்டில் வேலை செய்யாமல் இருந்த பேத்தி கௌரியை பாட்டி கண்டித்தாராம். இதில் கௌரி மன வருத்தத்தில் இருந்தாராம். இந்நிலையில் சனிக்கிழமை மாலையில் கமலாவதி, பேரன் கௌதமுடன் கோயிலுக்கு சென்றிருந்தாராம்.

Advertisement

அப்போது கௌரி வீட்டில் தாவணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பொ்னாா்டு சேவியா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.