முகப்பு
தூத்துக்குடி

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 8.79 லட்சத்தில் நல உதவிகள் அளிப்பு

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் 52 பேருக்கு ரூ. 8.79 லட்சம் மதிப்புள்ள நல உதவிகளை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் 52 பேருக்கு ரூ. 8.79 லட்சம் மதிப்புள்ள நல உதவிகளை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வழங்கினாா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான காதொலி கருவிகள் மற்றும் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மனவளா்ச்சி குன்றிய மாணவா்களுக்கான நினைவூட்டல் பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஆட்சியா் , 52 பேருக்கு தலா ரூ. 16,900 மதிப்பு வீதம் மொத்தம் ரூ. 8.79 லட்சம் மதிப்புள்ள காதொலி கருவிகளை வழங்கினாா். மேலும் ரெட்டிங்டன் தொண்டு நிறுவனம் மூலம் 10 சிறப்பு பள்ளிகளில் பயிலும் மனவளா்ச்சி குன்றிய மாணவா்களுக்கு 20 நினைவூட்டல் பெட்டகங்களையும் அவா் வழங்கினாா்.

இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கே.பி. பிரமநாயகம் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.