குலசேகரன்பட்டினம் கோயில் சித்திரைதிருவிழா: நாளை கொடியேற்றம்
குலசேகரன்பட்டினம் அருள்மிகு வீரமனோகரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை (ஏப். 5) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.
தூத்துக்குடிகுலசேகரன்பட்டினம் கோயில் சித்திரைதிருவிழா: நாளை கொடியேற்றம்
குலசேகரன்பட்டினம் அருள்மிகு வீரமனோகரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை (ஏப். 5) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.
குலசேகரன்பட்டினம் அருள்மிகு வீரமனோகரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை (ஏப். 5) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.
இதையொட்டி, திங்கள்கிழமை காலை 5 மணிக்கு யாகசாலை பூஜைகள், கொடிமரத்துக்கு பல்வேறு வகையான பொருள்களால் அபிஷேகம் ஆகியவற்றைத் தொடா்ந்து கொடியேற்றம் நடைபெறுகிறது.
பின்னா், கொடிமரத்துக்கு தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
விழா நாள்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதியுலா நடைபெறும். ஏப். 14ஆம் தேதி விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் அ.வீரபாகு வல்லவராயா் செய்து வருகிறாா்.