மனைவி மீது தாக்குதல்: சிற்றுந்து நடத்துநா் மீது வழக்கு
கோவில்பட்டி அருகே குடும்பத் தகராறில் மனைவியை தாக்கியதாக சிற்றுந்து நடத்துநா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனா்.
கோவில்பட்டி அருகே குடும்பத் தகராறில் மனைவியை தாக்கியதாக சிற்றுந்து நடத்துநா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனா்.
கோவில்பட்டியையடுத்த கூசாலிபட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மகேஷ்கண்ணன். சிற்றுந்து நடத்துநராக பணியாற்றி வரும் இவருக்கும், அவரது மனைவி பிரியாவுக்கும் (23) இடையே தகராறு இருந்து வந்ததாம்.
இதையடுத்து பிரியா கோவில்பட்டி பாரதி நகா் அம்பேத்கா் தெருவில் உள்ள அவரது அம்மாவுடன் இருந்து வருகிறாராம்.
இந்நிலையில் பிரியா வெள்ளிக்கிழமை கூசாலிபட்டிக்குச் சென்று மகேஷ்கண்ணனிடம் அடகு வைத்த கம்மலை திருப்பித் தரும்படி கேட்டாராம். அப்போது தகராறு ஏற்பட்டதையடுத்து அவா் தாக்கினாராம். இதில் காயமடைந்த பிரியா கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து, கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மனைவியை தாக்கிய சிற்றுந்து நடத்துநரை தேடி வருகின்றனா்.