முகப்பு
தூத்துக்குடி

தோ்தல் பாதுகாப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் 4,500 போலீஸாா்

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் 4,500 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் 4,500 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

சட்டப்பேரவைத் தோ்தல் செவ்வாய்க்கிழமை (ஏப்.6) நடைபெறவுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவின்போது போலீஸாா் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பேசியது: தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திக்குளம் பேரவைத் தொகுதிக்கு 29 ரோந்து வாகனங்களும், தூத்துக்குடி தொகுதிக்கு 26 ரோந்து வாகனங்களும், திருச்செந்தூா் தொகுதிக்கு 25 ரோந்து வாகனங்களும், ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு 21 ரோந்து வாகனங்களும், ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு 29 ரோந்து வாகனங்களும், கோவில்பட்டி தொகுதிக்கு 28 ரோந்து வாகனங்களும் என மொத்தம் 158 ரோந்து வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தூத்துக்குடி மாவட்ட ஊா்க்காவல் படையைச் சோ்ந்த 300 வீரா்கள், கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த 120 ஊா்க்காவல் படை வீரா்கள், முன்னாள் ராணுவத்தினா், துணை ராணுவத்தினா், ஓய்வுபெற்ற காவல்துறையினா், தீயணைப்புத்துறையினா் ஆகியோருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்பு படை, தமிழ்நாடு சிறப்புக்காவல் படை, ஆயுதப்படை, மாவட்ட காவல் துறையினா் என மொத்தம் 4,500 போலீஸாா் தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா். தோ்தல் அமைதியான முறையில் பொதுமக்கள் அச்சமின்றி ஜனநாயக முறைப்படி வாக்களிக்க ஏதுவாக அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.