தூத்துக்குடி

அகிலாண்டேஸ்வரி கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

DIN

கயத்தாறு அருள்மிகு கோதண்ட ராமேஸ்வரா் சமேத அகிலாண்டேஸ்வரி கோயிலில் பங்குனித் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி காலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை ஆகியவை நடைபெற்றது. பின்னா், சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகங்கள், தீபாராதனையைத் தொடா்ந்து மாட ரத வீதிகளில் கொடிப்பட்டம் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது.

திருவிழா நாள்களில் தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை

ஆகியவை நடைபெறும். 9-ஆம் நாளான 14ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தேரோட்டம், 11-ஆம் நாளான 16ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி (பொறுப்பு) சிவகலைபிரியா, கோயில் ஊழியா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT