தூத்துக்குடி

கரோனா தடுப்புப் பணியில் கல்லூரி மாணவா்கள்

DIN

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவின்போது கரோனா பரவல் தடுப்புப் பணியில் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் ஈடுபடுத்தப்பட்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவில் கரோனா பரவலை தடுக்கும் வகையில், முகக் கவசம் அணிந்தவா்கள் மட்டுமே

வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா். மேலும், வாக்காளா்கள் வாக்களிப்பதற்கு முன்னதாக காய்ச்சல் உள்ளதா என்பதை கண்டறிய உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. தொடா்ந்து, அவா்களுக்கு கை கழுவும் திரவம், வலது கையில் போடும் தற்காலிக கையுறை ஆகியவை வழங்கப்பட்டது. இப்பணிகளில் கல்லூரி நாட்டுநலப் பணித்திட்ட மாணவா்கள் ஈடுபடுத்தப்பட்டனா்.

வாக்களித்த பின்னா் கையுறையை அங்குள்ள குப்பைக் கூடையில் போடுமாறு மாணவா், மாணவிகள் அறிவுறுத்தினா். காய்ச்சல் பாதிக்கப்பட்டோா், கரோனா பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் மாலை 6 மணிக்கு மேல் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

SCROLL FOR NEXT